என் மலர்tooltip icon

    டெல்லி

    • விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்தது T
    • கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரும் அடங்குவார்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20 காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குற்றம்சாட்டப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டி ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்ததாகவும், டெல்லியில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கோபமடைந்து இந்த தாக்குதலை செய்ததாவும் தெரியவந்தது.

    ராஜேஷ் டெல்லிக்கு வந்தபோது, அவரது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தார். டெல்லி காவல்துறை குழு ராஜ்கோட்டில் ஐந்து பேரை விசாரித்தது. இதில் கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார். அந்த ஓட்டுனரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் எடுத்து.

    இந்நிலையில் ராஜேஷ் ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    சம்பத்தன்று ராஜேஷ் முதல்வரின் வீட்டிற்கு கத்தியை கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பைக் கண்டதும், அவர் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் வீசினார். அது தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

    • தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
    • அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு குறித்து 2016ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அந்த சமயத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 2017இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சான்றிதழை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மோடியின் சான்றிதழை டெல்லி பல்கலைக்ழகம் வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 

    • காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது.
    • நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.

    காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் கட்டமைப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் என்ற வகையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என கட்சி தலைவர்களிடம் பேசும்போது, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே வலியுறுத்தினார்.

    ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சா் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.

    இது தொடர்பாக கார்கே வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.

    கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

    பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம்.
    • அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இரவும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தடியடி நடத்தி 40 பேரை கைது செய்தனர்.

    மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.

    இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலை வாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு தடியடிதான் கிடைத்தது.

    மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.

    முதலில் அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள்.

    அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்கமாட்டார்கள். தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    • முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
    • பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.

    தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.

    இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-

    முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.

    கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.

    ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.

    முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

    • நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.
    • மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது.

    பாராளுமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏற முயன்றதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியைச் சேர்ந்த ராம் சங்கர் பிந்த், வெள்ளிக்கிழமை காலை, பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.

    அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தி, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது. விசாரணையின் போது எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரமும் கிடைக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.

    விசாரணையின் போது, ராம் சங்கர் பிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்றவழக்கில் கைதாகி, 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும்.
    • முதலில் பிரதமர் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதை மோடி ஏற்கவில்லை என்கிறார் கிரண் ரிஜிஜு.

    பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இந்த நிலையில், இந்த மசோதாவில் முதலில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட வேண்டாம் என மந்திரி சபையில் ஆலோசனை வழங்கப்பட்டது. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கூறி பிரதமர் மோடி ஆலோசனையை ஏற்க மறுத்தார். இதனால் பிரதமர் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின் மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்ததாவது:-

    130-வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல- இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா. 30 நாள் கைது= தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல். விசாரணை இல்லை, தண்டனை இல்லை- பாஜகவின் கட்டளை மட்டுமே.

    சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன. வாக்குகளைத் திருடுதல், போட்டியாளர்களை அமைதிப்படுத்துதல் மற்றும் மாநிலங்களை நசுக்குதல். ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், மேலும் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றும் இந்த முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமரின் கீழ் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளங்களையும் கெடுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

    வாக்கு திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைக்கப்பட்டதற்கான ஆணையே கடுமையான கேள்விக்குறியாக உள்ளது. அதன் சட்டபூர்வமான தன்மை சந்தேகத்திற்குரியது. மோசடி மூலம் மக்களின் ஆணையைத் திருடிய பாஜக, இப்போது இந்த அம்பலப்படுத்தலில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தீவிரமாக உள்ளது. அதைச் செய்ய, அவர்கள் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர்.

    இந்த மசோதாவின் திட்டம் தெளிவாக உள்ளது. இது, மாநிலங்கள் முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் போடவும், 30 நாள் கைது கூட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு காரணமாகக் கருதும் விதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களை நீக்கவும் பாஜகவை அனுமதிக்கிறது, எந்த தண்டனையும் அல்லது விசாரணையும் இல்லாமல். இந்த அரசியலமைப்புக்கு விரோதமான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும், ஏனெனில் குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல.

    இது பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் NDA-வில் உள்ள பிராந்தியக் கட்சிகளை மிரட்டுவதற்கான ஒரு தீய முயற்சி. எந்தவொரு வளர்ந்து வரும் சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கையும், போட்டியாளர்களைக் கைது செய்து பதவியில் இருந்து அகற்றுவதற்கான அதிகாரத்தை தனக்கு வழங்குவதாகும். இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது.

    இவ்வாறு தெரிவித்திருந்தார். 

    • மனைவியின் கூந்தலை பிடித்து தரதரவென இழுத்து தாக்கிய வீடியோ வெளியானது.
    • எரிந்த நிலையில் விக்கி படிக்கட்டில் இருந்து கீழே நொண்டி நொண்டி இறங்கும் காட்சியும் வெளியானது.

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். அவர் விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.

    நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர்  உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விபின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என்ன நடந்தது என்று என்னிடம் ஏன் சொல்லவில்லை?. என்னை விட்டுவிட்டு ஏன் சென்றாய்? ஏன் இப்படி செய்தார். இந்த உலகம் என்னை கொலைகாரன் என்று அழைக்கிறது, விக்கி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீ என்னை விட்டுச் சென்ற பிறகு (உயிரிழந்தபின்) நான் தவறாக நடத்தப்பட்டு வருகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கொலை குறித்து, விக்கியின் சகோதரி மற்றும் விக்கியின் மகன் கூறியிருந்தது மனதை உலுக்கும் வகையில் இருந்தது.

    விக்கியின் சகோதரி காஞ்சன் இதே வீட்டில் மருமகளாக உள்ளார். காஞ்சன் தனது சகோதரிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.

    நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.

    35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்.
    • மகன் கண்முன்னே மனைவியை தீ வைத்து கொளுத்திய கொடூரம்.

    கிரேட்டர் நொய்டாவில் கட்டிய மனைவியை 36 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து கொடூர கணவன், அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.

    நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இதேவீட்டில் மருமகளாக உள்ள நிக்கியின் சகோதரி, காஞ்சன் இது தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.

    நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.

    35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
    • நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    சீர்திருத்தங்களின் தொடர்ச்சி மழைக்கால கூட்டத்தொடரில் தெளிவாகத் தெரிந்தது. எதிர்க்கட்சிகளின் பல குறுக்கீடுகள் இருந்தபோதிலும், நாங்கள் சீர்திருத்தங்களை விடாமுயற்சியுடன் கொண்டு வர முடிந்தது.

    இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை அடிப்படையிலான மற்றும் மக்கள் சார்பு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தமாகும்.

    இன்று நமது நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவிட் நோயின் இவ்வளவு பெரிய நெருக்கடியை நாம் எதிர்கொண்டிருக்கும் போது, நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதியை திரட்டுகின்றன.

    நமது வங்கிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவானதாக உள்ளன. பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வட்டி விகிதங்கள் சாதகமாக உள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அந்நிய செலாவணி இருப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இது மட்டுமல்லாமல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சந்தைக்கு பங்களித்து வருகின்றனர். உள்நாட்டில் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.

    • உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
    • எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர்.

    உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர் மார்க்கண்டே கட்ஜு. இவர் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது.

    அதாவது, நீதிபதி பணியில் இருந்தபோது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தந்ததாக பதிவிட்டிருந்தார். 

    இந்த பதிவு சர்ச்சையாகி பலரும் குறிப்பாக உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பதிவுக்கு கட்ஜு மன்னிப்பு கோரியுள்ளார். 

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், "நகைச்சுவையாக மட்டுமே சமூக தளத்தில் அதை பதிவிட்டேன்; உடனே அதை நீக்கியும் விட்டேன்.

    எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.
    • ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

    அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் தபால் சேவைகளை நிறுத்துவதாக இந்திய தபால் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக ஆகஸ்ட் 25 முதல் தபால் சேவைகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.

    ஜூலை 30 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, 800 டாலர் வரையிலான பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் மதிப்பு எதுவாக இருந்தாலும், சுங்க வரி விதிக்கப்படும்.

    இருப்பினும், இந்த விதிமுறைகளில் இருந்து சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 100 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுகளை அனுப்புவதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது.

    எனவே கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிற அனைத்து வகையான அஞ்சல் சேவை சார்ந்த முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது

    ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக, கட்டாய சூழ்நிலைகளில் அஞ்சல் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

    ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   

    ×