என் மலர்tooltip icon

    டெல்லி

    • தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் பெண் பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.
    • பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது ஒரு வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக ரிஷிகா குப்தா என்ற பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ரிஷிகா தனது பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.

    அதில், அந்த வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக குறிப்பிட்டு இந்த வகையான மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒருவர் எவ்வளவு அழுக்காக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது செயலுக்காக வருத்தப்படவில்லை. அவரை போன்ற ஒரு வாலிபரை எந்த பெண்ணும் சந்திக்க கூடாது என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.
    • காங்கிரசின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்கள் பலன் தராததால், அச்சத்தின் காரணமாக, அவர் இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    இந்தியா தவறான பாதையில் செல்லாது!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியத்தை எனது அரசாங்கம் ஊக்குவித்தது.
    • உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது.

    புதுடெல்லி:

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் பிரசாரத்தின் போது இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது.

    ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணமும் தொடரும் என்று நாடு நம்புகிறது.

    யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியத்தை எனது அரசாங்கம் ஊக்குவித்தது.

    உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது.

    நமது கலாச்சார பிம்பம் பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. உலகின் பழமையான நாகரிகம் மட்டுமல்ல, மனித குலத்துக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

    டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

    டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும்.
    • காங்கிரசை பொறுத்தவரை 2014 தேர்தலில் பெற்றதைவிட 2 சதவீத தொகுதிகள் குறைவாகவே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    பிரபல பொருளாதார மற்றும் வாக்களிப்பியல் துறை நிபுணரான சுர்ஜித் பல்லா ஆய்வு நடத்தி வாக்காளர்களின் மனநிலை பற்றிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதுபற்றி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும்.

    கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும் போது வெற்றி பெறும் இடங்கள் 5 முதல் 7 சதவீதம் அதிகமாக இருக்கும்.

    ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அலை, எதிர்ப்பு அலை என்று ஏதாவது இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் எந்த அலையும் இருக்காது. காங்கிரசை பொறுத்தவரை 2014 தேர்தலில் பெற்றதைவிட 2 சதவீத தொகுதிகள் குறைவாகவே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அந்த கூட்ட ணிக்கு ஒரு தலைமையை தேர்வு செய்து முன்னிலை படுத்தி இருந்தால் போட்டி நிலவி இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    பா.ஜனதா தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கூட 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதற்கு மேல் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை.

    அதே போல் கேரளாவிலும் ஒன்று அல்லது 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 18 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், ஜேக் பிரேசர் மெக்குர்க் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

    • நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
    • மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு உத்வேகமாக உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் 3-வது கட்ட தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

    அதன்படி தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் என மொத்தமாக ரூ.36 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ரூ.15.77 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகளும், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகளும் இருப்பதாக தெரிவித்துள்ள அமித்ஷா, தனக்கு ஆண்டு வருமானமாக ரூ.75.09 லட்சம் கிடைப்பதாக கூறியுள்ளார்.

    இதேபோல் ஆந்திராவில் மே 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 2019-ம் ஆண்டு இருந்ததை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திராவின் இந்துப்பூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 3,4,5-வது இடங்களில் உள்ளன.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
    • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
    • ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

    2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்

    நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"

    இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×