என் மலர்
டெல்லி
- சூரத் தொகுதியில் முகேஷ தலால் உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
- இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள சூரத் தொகுதிக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவரது வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.
இந்நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூரத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சூரத் பாராளுமன்ற தேர்தலை மேட்ச் ஃபிக்ஸ் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் உள்ள கோபத்தைக் கண்டு அக்கட்சி பயந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
- தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்று வேண்டுகோள்.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் இரண்டு பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் இருப்பதாக தடை விதித்துள்ளது.
இதை அடுத்து, நாட்டில் உள்ள எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளின் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில்,"நாட்டின் அனைத்து உணவு ஆணையர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசாலாப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்களில், நாட்டின் அனைத்து மசாலா உற்பத்தி ஆலைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படும்.
எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மட்டுமின்றி, அனைத்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்படும். இன்னும் 20 நாட்களில் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை குறித்து ஹாங்காங், சிங்கப்பூர் கூறுவது என்ன ?
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், "அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில்" எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறப்படும் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளின் நான்கு பொருட்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மக்களை எச்சரித்துள்ளனர். எத்திலீன் ஆக்சைடு புற்றுநோய்க்கான சர்வதேச அமைப்பால் 'குரூப் 1 கார்சினோஜென்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எம்டிஎச்-ன் மூன்று மசாலா பொருட்கள் -- மெட்ராஸ் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), சாம்பார் மசாலா (கலவை மசாலா தூள்), மற்றும் கறி பொடி (கலவை மசாலா தூள்) -- எவரெஸ்டின் மீன் கறி மசாலாவுடன் "ஒரு பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு" உள்ளது.
எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மசாலா வாரியத்திடம், தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், இன்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
விளையிட்டு துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணாவிற்கு பதம்ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
கலைத் துறையில் சிறந்து விளங்கிய பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.
கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
- திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்
- திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் - கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.
ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- பா.ஜனதா தலைவர்கள் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் சொத்துகளில் (வளங்கள்) முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் அரசு தெரிவித்திருந்தது" என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார்.
2006 தேசிய வளர்ச்சி மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக பா.ஜனதா வீடியோவும் வெளியிட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியின் பேச்சை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, 2006-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், வேலை வாய்ப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி" உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
அப்போது, "நமது முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு, பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் தான் நமது முன்னுரிமை.
பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பெறுவதை உறுதிசெய்ய, திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது தான்." என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த கருத்துக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கிய பிறகு பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது.

அதில், "வளங்கள் மீதான முன்னுரிமை" குறித்த பிரதமரின் பேச்சு வேண்டுமென்றே தவறாக பரப்பப்பட்டதின் காரணமாக சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமரின் பேச்சினை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது. பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற அனைவரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தான் இது குறிக்கிறது.
சமீப மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த அறிவிப்புகளை மேற்கொண்டார். பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தினாலும், நலிவடைந்த மற்றும் சிறுபான்மை பிரிவினரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். "இந்தியா பிரகாசிக்க வேண்டும், ஆனால் அது அனைவருக்குமே பிரகாசிக்க வேண்டும்" என்று பிரதமர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்".
"வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்" என்ற பிரதமரின் குறிப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு உள்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து "முன்னுரிமை" பகுதிகளையும் குறிக்கிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து பார்க்க முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது
- ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்?
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்களை பிரதமருக்கு அனுப்பப்போவதாகவும், மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்? இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்பவர் அவர்தான் என்பதை அவரது நேற்றைய பேச்சு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு பிரதமர் இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்குவோம். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாவற்றிலும் பொய் சொல்ல பிரதமருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதா? எல்லாவற்றிலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஏன் மவுனம் காக்கிறது" என்று தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம்.
- நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.
ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- 5 பேர் மீதான காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புதுடெல்லி:
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சதானந்தம் ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 பேர் மீதான காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீதான காவலை மே 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
- வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது.
- ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்குகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் வருகிற 26- ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் மாநிலத்தில் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும், மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக வெயில் அடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.
பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது.
இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் அவசரமாக கூடி ஆலோசித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரசாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.
In view of forecast of above normal temperatures & heat waves in parts of the country, Commission is holding a meeting with different stakeholders this morning. The meeting is discussing measures to mitigate risk. Officers of @IMD, NDMA and MoHFW are attending the meeting. pic.twitter.com/AwjtrBnNwX
— Spokesperson ECI (@SpokespersonECI) April 22, 2024
- அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
- டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
- தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
- இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 102 இடங்களில் கடந்த 19-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மோடி அலை வீசியதாக பா.ஜனதா கூறுகிறது. ஆனால், மோடியின் தோல்வியை முதற்கட்ட வாக்குப்பதிவு வெளிப்படுத்தியுள்ளது. 200 தொகுதிகளைக் கூட பா.ஜனதா கூட்டணி தாண்டாது. அதன் விரக்தியால் பிரதமர் மோடி உண்மையான பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் பேசி வருகிறார் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதை வலுப்படுத்தும் விதமாக டாக்டர் மன்மோகன் சிங் பேசிய 22 நிமிட வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு "காங்கிரஸ் சொந்தப் பிரதமரை நம்பவில்லையா?" எனக் குறிப்பிட்டிருந்தது. 2006-ல் மன்மோகன் சிங் பேசியது தொடர்பாக சர்ச்சை வெளியான நிலையில், அப்போதைய பிரதமர் அலுவலகம் அதற்கு பதில் அளித்திருந்தது.
தற்போது பிரதமர் மோடி பேசியதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்துக்குப் பிறகு, அச்சம் காரணமாக நரேந்திர மோடியின் பொய்களின் அளவு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவுதற்கு விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியின் புரட்சிக்கரமான தேர்தல் அறிக்கை மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்தியா வேலை வாய்ப்பு, குடும்பம், எதிர்காலம் ஆகியற்றிற்காக வாக்களிக்கும். இந்தயா தவறான பாதையில் செல்லாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள். இதனால் பிரதமர் மோடியின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
18-வது பாராளுமன்ற மக்களவைக்கான ஓட்டுப்பதிவை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
64 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. திரிபுராவில் அதிகபட்சமாக 80 சதவீதமும், பீகாரில் குறைந்தபட்சமாக 49 சதவீதமும் பதிவானது.
2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன் விவரம்:-
கேரளா-20, கர்நாடகம்-14, ராஜஸ்தான்-13, மகாராஷ்டிரா-8, உத்தரபிர தேசம்-8, மத்தியபிரதேசம்-7, அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, மேற்கு வங்காளம்-3, திரிபுரா-1, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1 ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரது தொகுதிக்கான வாக்குப்பதிவு 2-வது கட்டத்தில் வருகிறது. ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இதேபோல திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் சசிதரூரும், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரும் களத்தில் உள்ளனர்.
பாலிவுட் நடிகையான ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியும் (உத்தரபிரதேசம்) 2-வது கட்டத்தில் வருகிறது. அவர் 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். ராமாயணம் புகழ் அருண் கோவில் போட்டியிடும் மீரட் தொகுதியிலும் இரண்டாவது கட்டத்தில் தேர்தல் நடக்கிறது.
2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் ஜாலோர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அங்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகள் 2-வது கட்ட தேர்தலில் வருகிறது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சத்தீஸ்கரிலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கேரளாவிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.
தலைவர்களின் தீவிர பிரசாரத்தால் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.






