என் மலர்
இந்தியா
- அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது.
- இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
புதுடெல்லி:
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், பரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், தேவைப்பட்டால் அவர்களை சிறப்பு விமானங்களில் அழைத்து வருவது பற்றியும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?
- மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.
மதுரையில் இன்று மாலை நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை சொந்தங்களே நீங்கள் என் மீது பொழியும் பேரன்பு மலேசியாவில் இந்தியர்கள் என் மீது பொழிந்த பேரன்மை நினைவுபடுத்துகிறது.
நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் இனிக்கும் மல்லிகைக்கும் பெயர்போனது மதுரை மண்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது.
திமுகவின் கனவுக்கோட்டை கானல் நீராக மாறிவிடும், இந்த தேர்தல் மாற்றத்தை கொண்டுவரும் தேர்தல்.
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
திமுக ஆட்சியை வழியனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டனர்.
வரும் தேர்தல் திருப்புமுனையாக அமையும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
மாஃபியா போல் தமிழ்நாட்டை திமுக கொள்ளை அடிக்கிறது.
மோசமான சாலை, அசுத்தமான குடிநீர் இதைத்தான் திமுக அரசு கொடுத்தது.
ஊழல் காரணமாக மதுரை மாநகர் மேயரின் பதவியே பறிபோய் உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி.
25 ஆண்டுகளுக்கு பின் முழு மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சிக்கு வந்தும் கூட தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
மதுரை மக்கள் எம்ஜிஆருடன் நின்றார்கள் அதனால் மதுரையை திமுகவிற்கு பிடிக்கவில்லை. ஊழல் ஆட்சியா? என்டிஏ கூட்டணி ஆட்சியா? என்ன வேண்டும் என மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
திமுக அரசின் ஊழல் ஆட்சியால் லட்சக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசால் ஏழைகளுக்கான 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது. திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?
மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.
பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் திமுகவின் மாடல்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக வாய் கிழிய பேசும் திமுக மாநில மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
- திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.
என்டிஏ பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பிரதமர் மோடி பேசினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மருது சகோதரர்கள் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நீதிக்கும் கண்ணியத்திற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரை நினைவு கூர்கிறேன்.
இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞருக்கு அஞ்சலி.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பூரணச்சந்திரனை நினைவு கூர்கிறேன். இளைஞர் பூரண சந்திரன் செய்த உயிர் தியாகத்தை எண்ணி மனம் கனக்கிறது. அவரது குடும்பத்தினருகு்கு இரங்கல்.
பூரணச்சந்திரன் மனைவி, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.
திமுக என்ன சதி செய்தாலும் இறுதியில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கும் எம் மக்களே வெல்வார்கள்.
திமுக என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
வரும் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- போர் என்பது தீர்வாகாது.
- போர் மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி கமேனி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.
ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல. அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், ராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது. அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.
எனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு, மோதலை கட்டுப படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.
மதுரை மண்டேலா நகரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.
பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக நாடுகள் நேசிக்கும் தலைவர் பிரதமர் மோடி.
- மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் வரவேற்புரை அளித்தார்.
அப்போது அவர்,"உலக நாடுகள் நேசிக்கும் தலைவர், வாராது வந்த மாமணி பிரதமர் நரேந்திர மோடியை வர்வேற்பதாக" குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது:-
புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம்.
உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்ஐம் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறது திமுக.
சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதுமட்டுமின்றி புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க. (அன்புமணி), தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
தமிழகத்தில் இந்த கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2-வது கட்டமாக தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி, புதுச்சேரியை தொடர்ந்து, மதுரைக்கு வருகை தந்தார். பல்வேறு அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில், மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில் பிரதமர் மோடி வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 9 வந்தே பாரத் ரெயில் வழங்கப்பட்டது, புதிதாக 77 ரெயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புனரமைக்கப்பட்ட 8 ரெயில் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன். பெங்களூரு- சென்னை, ஐதராபாத்-சென்னை இடையில் புல்லட் ரெயில் திட்டங்கள் வர உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன்.
- கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
மதுரையை காக்கும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு தலைவணங்குகிறேன், அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களால் வேலைவாய்ப்பு, சிறந்த கட்டுமானங்கள் கிடைக்கும்.
சந்தைகளை சென்றடையும் விவசாயிகள், சுற்றுலாப்பயணிகள் என அனைவருக்கும் உகந்த சாலைகள் கிடைக்கும்.
புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன். 2014ம் ஆண்டு முதல் 4,000 கி.மீக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தேசிய சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கான சாலை திட்டங்களில் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று முதல் நாளை மறுநாள் வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
4-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
5 மற்றும் 6-ந்தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
7-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதற்கிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து, இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.






