என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
    X

    மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்

    • அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது.
    • இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், பரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது, மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், தேவைப்பட்டால் அவர்களை சிறப்பு விமானங்களில் அழைத்து வருவது பற்றியும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

    Next Story
    ×