என் மலர்
நீங்கள் தேடியது "2026 state Assembly Election"
- 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
- தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.
நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்ற தேர்தல் வேறு. 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். கருத்துக்கணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதும் தெரியவரும்.
தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு.
இவ்வாறு கூறினார்.
- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது.
ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. அதை வேகப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது. வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அங்கு வெளியிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.
அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன்.
- நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சீமான்" சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்.
நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
- புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.
வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
- கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பேது அவர் கூறியதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கூட்டணிக்கான காலத்திற்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.
அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். மைக்கில் பேசுவது அரசியல் அல்ல, களத்தில் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும் - தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
"ஒருங்கிணைப்புக்குழு" பின்வருமாறு அமைக்கப்படுகிறது.
அமைச்சகர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






