என் மலர்
நீங்கள் தேடியது "ஒருங்கிணைப்பு குழு"
- பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
- செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இருப்பினும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் செங்கோட்டையன் பண்ணை வீட்டிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
அதன்படி, செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டுமென நினைப்பவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை செங்கோட்டையன் தொடங்கினார்.
- மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படுகிறது.
- 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள்.
தாராபுரம் :
பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பகுதி நேர சிறப்பாசிரியர்க ளை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதி நேர சிறப்பா சிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:- அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2012ல் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி என 8 பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படு கிறது. தொடக்கத்தில் 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தி.மு.க., தெரிவித்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
கடந்த 11 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.
- அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும் - தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
"ஒருங்கிணைப்புக்குழு" பின்வருமாறு அமைக்கப்படுகிறது.
அமைச்சகர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






