என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிக இடங்களை கேட்போம்- விஜய்வசந்த்
    X

    2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிக இடங்களை கேட்போம்- விஜய்வசந்த்

    • கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது.

    ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. அதை வேகப்படுத்த வேண்டும்.

    கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது. வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.

    ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அங்கு வெளியிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.

    அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×