search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை
    X
    பெண்கள் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை

    பெண்கள் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை

    எங்கு எப்போது பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது யாரும் அறிந்திராத ஒன்று. அப்போது தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 4 வயது சிறுமி முதல் 60 வயது முதிர்ச்சியடைந்த பெண் வரை அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையினால் பாதிக்கப்படுகிறார்கள்.

    வீட்டில் பெண்களை அடைத்து வைத்திருந்த காலம் மாறி, பெண்களும் வெளிவந்து ஆண்களுக்கு நிகராக சாதனைகள் படைக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. இன்றைய பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றால், திரும்பி வீட்டிற்கு வரும் வரை பெற்றோர் மற்றும் கணவர் பயத்துடனே இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

    எங்கு எப்போது பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது யாரும் அறிந்திராத ஒன்று. இதுவரை நல்லவராக இருந்த ஒருவர் திடீரென மாறுவது நமக்கு எப்படி தெரியும். அப்போது தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    1 தவறான எண்ணத்தோடு உங்களை யாரேனும் நெருங்கினால், அவர்களிடமிருந்து விலகி மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.

    2 யாரெனினும் உங்களை பின் தொடர்வதாக உணர்ந்தால், உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு தொலைபேசியில் தெரிவித்து அவர்களின் உதவியை நாடலாம். அவர்கள் வரும் வரை கூட்ட நெரிசல் உள்ள இடங்கள் அல்லது கடைகளில் காத்திருக்கலாம்.

    3 தனியாக ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் பெண்கள், அந்த கார் அல்லது ஆட்டோவின் எண்ணை பெற்றோர் அல்லது கணவருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

    ஒருவர் உங்களை யாரும் இல்லாத பகுதியில் தாக்க வந்தால், உங்களை காப்பாற்றிக் கொள்ள செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

    1 உங்கள் கையில் இருக்கும் பொருட்களை அவர்களின் மீது பலமாக தூக்கி எறியுங்கள்.

    2 தாமதிக்காமல் அவரின் பிறப்புறுப்பு பகுதியில் அதிவேகத்துடனும், பலத்துடனும் தாக்குங்கள்.

    3 சிறிதும் நேரம் எடுக்காமல் அவரின் தாடை பகுதியில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓட துவங்குங்கள்.
    Next Story
    ×