என் மலர்

  ஆரோக்கியம்

  வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன்
  X
  வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன்

  வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத்திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.
  ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது.

  நாகரிகமாக உடை உடுத்துவதையும், அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது. மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத்திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

  ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் முடியும். இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காக, ‘இமேஜ் கன்சல்டென்ட்’ என்ற துறை வழிகாட்டுகிறது.

  நடை, உடை, பாவனைகளில் எத்தகைய மாற்றங்களை செய்யவேண்டும்- மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளை பற்றி எல்லாம் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

  ஒருவரை சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப்பற்றிய ‘இமேஜை’ அவரிடம் உருவாக்கும். நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை பெற்றுத்தந்துவிடுவதில்லை. அதற்கு மேலும் காலத்துக்கு தக்கபடி புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. அவைகளை ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை வழங்குகிறது.

  ஒருவரை சந்திக்கும்போது கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொள்ளும் முறை, வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கும் விதம், பேசும் விதம், தொலைபேசியில் உரையாடும் விதம், தகவல் பரிமாறும் முறை, நடை பாவனை, உடை அலங்காரம் என கவனிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை கற்றுத்தருகிறது. இந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஓரளவாவது அவரது குணாதிசயங்களை கண்டறிந்து விடுவார்கள்.

  பொது மக்களோடு நெருங்கிப்பழகும் துறைகளில் இருப்பவர்களுக்கு ‘இமேஜ் கன்சல்டென்ட்’ வழிகாட்டும். அதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய இமேஜை உயர்த்திக்கொள்ளலாம். மேலை நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் இந்த துறை பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  Next Story
  ×