search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தையின்மை பிரச்சினைக்கு பக்கவிளைவில்லாத சிகிச்சை
    X

    குழந்தையின்மை பிரச்சினைக்கு பக்கவிளைவில்லாத சிகிச்சை

    • அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும்.
    • குழந்தையின்மை ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

    இன்றைய கால சூழலில் குழந்தையின்மை என்பது ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றுக்கு நம் பாரம்பரிய மருத்துவ முறை மூலமே பல்வேறு தீர்வுகளை தருகிறது. அதற்கு ஓம் மரபுவழி மருத்துவமனை சார்பில் அந்த குறைபாடு இருக்கும் பட்சத்தில் எளிய தீர்வுகளையும் காண்போம்.

    சீரற்ற மாதவிடாய் சுழற்சி: சீரற்ற மாதவிடாய் சுழற்சி குறைபாடு மாறுவதற்கு தினமும் இரவு அத்திப்பழம், பால் சாப்பிடலாம். கருமுட்டை வளர்ச்சி போன்ற காரணிகள் இருப்பின் அதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளது.

    கருப்பை (சினைப்பை) நீர்க்கட்டி: சீரற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலியல் இதற்கு காரணமாக அமைகிறது. இந்த பிரச்சினை இருந்தாலும் குழந்தை உருவாவதற்கு பெருவாரியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் இது பாதிப்பையும் உண்டாக்கும். இந்த பிரச்சினை வராமல் தடுக்க வாரம் இருமுறை எண்ணெய் குளியல், உணவில் தேவையான அளவு துவர்ப்பு சுவை ஆகியவை உதவும். இதனை களைவதற்கும் நம் மருத்துவ முறை மருந்துகளை அளித்துள்ளது. பெரும்பாடு, வெள்ளைப்பாடு, கருப்பை தடிமன், கருப்பை குழாய் அடைப்பு, கருப்பை திசுக்கட்டிகள், புற்று ஆகிய பிரச்சினைகளுக்கும் சித்த மருத்துவம் நல்ல தீர்வை அளிக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு நீந்தும் தன்மை குறைபாடு நீங்க பாதாம் பிசினை தினமும் இரவு பாலில் முருங்கை பிஞ்சு, பூ உணவில் சேர்க்க குறைபாடுகள் சரியாகும்.

    பாதிப்பு அதிகமாக இருப்பின் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கவும், நீந்தும் தன்மை அதிகரிக்கவும் எழுச்சி குறைபாடு சீர் செய்யவும் சிறப்பான மருந்துகள் நம் மருத்துவ முறையில் உள்ளது. மேலும் விரைப்பை, நரம்புச்சுருள் மற்றும் சில காரணிகளால் ஏற்படும் விந்தணு இல்லாமை உள்ளிட்ட நோய்களுக்கும் சித்த மருத்துவமுறை நல்ல தீர்வு அளிக்கும். எங்கள் மருத்துவமனையில் நவீன வசதிகள், ஆய்வுக்கூடம், நவீன உள் நோயாளிகள் வசதி, பிராணவாயு, தொக்கனம் வசதிகள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகள், பாரம்பரிய மருந்துகள், நவீன உபகரணங்கள், படித்த அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு இன்றைய கால சூழலுக்கு ஏற்ப கட்டமைத்து உள்ளோம்.

    குழந்தையின்மை தவிர ஆஸ்துமா, சைனஸ், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைக்கு சித்த மருத்துவ மகளிர் மற்றும் குழந்தைகள் நல பிரிவில் பட்டம் பெற்ற மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும். எங்கள் மருத்துவமனையில் நாங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை. ஆரோக்கியமான பெற்றோரை உருவாக்குகிறோம்.

    டாக்டர் பிரின்சி, தலைமை மருத்துவர்.

    டாக்டர் ஜெயந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்.

    டாக்டர் சுபாசினி, பொது மருத்துவர்.

    டாக்டர் வெங்கடகணபதி, பொது மருத்துவர்.

    ஓம் மரபுவழி மருத்துவமனை, 31, அருணாச்சலம் வீதி, பெரியார் சிலை அருகில், காரைக்குடி-630001. சிவகங்கை மாவட்டம்

    அலைபேசி: 9361810100, தொலைபேசி: 04565 236555/497666.

    Next Story
    ×