search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஸ்கால்ப் மசாஜ்
    X
    ஸ்கால்ப் மசாஜ்

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்

    கூந்தல் உதிர்வை தடுப்பதற்கு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யும் போது நல்ல பலனை காணலாம். இப்போது எப்படி ஸ்கால்ப் மசாஜ் செய்வது என்று பார்க்கலாம்.
    கூந்தல் உதிர்விற்கு சரியாக கூந்தலை பராமரிக்காததும், ஆரோக்கியமற்ற உணவுமுறையுமே காரணமாகும். இந்த பிரச்சனைகள் தீர ஸ்கால்ப்பை (Scalp) மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் படிப்படியாக கூந்தல் உதிர்வில் இருந்து விடுபடலாம். இப்போது எப்படி ஸ்கால்ப் மசாஜ் செய்வது என்று பார்க்கலாம்.

    10 விரல்களின் நுனியால் மண்டையை மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்திடுங்கள். மசாஜ் செய்யும் போது, முன்னந்தலையிலிருந்து பின்னந்தலை வரை மசாஜ் செய்யவும்.

    ப்ளாஸ்டிக் சீப், நகங்கள் ஆகியவை ஸ்கால்ப்பை சேதப்படுத்தும். மர சீப்பால் கூந்தலை அழுத்தி வார, ரத்த ஒட்டம் சீராகப் பாயும்.

    டீ ட்ரீ எண்ணெயை (Tea Tree oil) ஸ்கால்ப்பில் பூசி மசாஜ் செய்யலாம்

    தலையணையின் உறை சாட்டின் (satin) துணி வகையாக இருக்கலாம். அதுபோல கூந்தலைப் போர்த்தும் ஸ்கார்ப் (Scarf) சாட்டினாக இருப்பது நல்லது. ஏனெனில் மற்ற துணி வகைகள் கூந்தலில் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சி விடும்.

    5 நிமிடங்களுக்கு மேல் கூந்தலை ஹீட்டரால் காய வைக்கக் கூடாது. அவசர அவசரமாக கூந்தலை வாரி, சிக்கு எடுக்கக் கூடாது

    ஸ்கால்ப் ஈரமாக இருக்கையில் கூந்தலை சீப்பால் வாருவது தவறு. முள்ளங்கி, சோயா பீன்ஸ், புரோகோலி, ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் வராது.

    Next Story
    ×