search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான வெஜிடபிள் மஞ்சூரியன்
    X

    சப்பாத்திக்கு அருமையான வெஜிடபிள் மஞ்சூரியன்

    சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் மஞ்சூரியன். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து),
    வெங்காயம் - 1,
    பெரிய தக்காளி - 1,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வெங்காயத்தாள் - 1 கட்டு,
    காய்ந்த மிளகாய் - 2
    சோளமாவு - 3 டீஸ்பூன்,
    மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 1
    டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    காய்ந்த மிளகாயை சுடு தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து வைக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றவும்.

    அடுத்து அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து இறக்கும் பொழுது சிறிது நேரம் கொதிக்க விட்டு வெங்காயத்தாள் போட்டு கிளறி இறக்கவும்.

    கடைசியாக பொரித்து வைத்த உருண்டைகளை போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.

    சூப்பரான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×