search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ராஜஸ்தான் ஸ்பெஷல் தர்பூசணி சப்ஜி
    X

    ராஜஸ்தான் ஸ்பெஷல் தர்பூசணி சப்ஜி

    ராஜஸ்தானில் பிரசித்தி பெற்றது இந்த தர்பூசணி சப்ஜி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி பழத்தின் வெள்ளைப் பகுதி துண்டுகள் - ஒரு கப்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    தோல் சீவிய இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    தனியாத்தூள் (மல்லித்தூள்) - சிறிதளவு,
    ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தர்பூசணி பழத்தின் வெள்ளைப் பகுதியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் அதனுடன் தர்பூசணித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

    நன்றாக வெந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான தர்பூசணி சப்ஜி ரெடி.

    சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×