search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடை குறையும்
    X
    உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடை குறையும்

    உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை குறைக்கலாம்...

    உடற்பயிற்சியை மேற்கொள்ள இயலாதவர்கள் உணவுக் கட்டுப்பாடு, தூக்கம், ஓய்வு போன்றவைகளில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
    உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் உடல் இயக்க செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு உதவுகின்றன. எனினும் எப்போதும் பரபரப்பாக வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்கள் உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களில் பலரும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப் படுகிறார்கள். அவர்களிடம் போதுமான விழிப்புணர்வு தேவை.

    அதிகமாக சாப்பிடுவதுதான் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒருபோதும் வயிறு நிரம்பும் அளவுக்கு சாப்பிடக்கூடாது. பிடித்தமான, ருசியான உணவுகளை சாப்பிடும்போதும் அளவை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதனால் உணவை சாப்பிடுவதற்கு முன்பே பசியை தீர்க்கும் வழிமுறை பற்றி ஆலோசிக்கவேண்டும். அதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் பருகி வரலாம். உலர் பழங்களை சாப்பிடலாம். இவை பசியை அதிகம் கட்டுப்படுத்திவிடும். அதன் பின்பு சாப்பிட்டால் குறைந்த அளவு உணவே போதுமானது.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை விட, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறப்பானது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பினால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம். அவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட நேரம் உற்சாகமாக செயல்படவும் வழிவகுக்கும். அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப் பிடக்கூடாது.

    போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதும் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும். நீண்ட காலம் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்படவும் தூண்டும்.

    கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரத சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை குறைக்கவேண்டும். அவற்றை முழுமையாக ஒதுக்கிவிடவும்கூடாது. புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியது. சமச்சீரான சத்துணவு, சாப்பிடும் உணவில் இடம்பெற வேண்டும்.

    தூக்கத்திற்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருக்கிறது. போதுமான அளவு தூங்குவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனை கட்டுப்படுத்த உதவும். பசியையும் குறைக்கும். அதனால் கடும் பசியை உணர வேண்டியிருக்காது. சாப்பிடும் அளவும் அதிகரிக்காது. தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும். தூக்கத்தை இழக்கும்போது மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசால் ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகும். அதனால் கொழுப்பு அதிகமாகி, உடல் எடை அதிகரிக்கும்.

    உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியை மேற்கொள்ள இயலாதவர்கள் உணவுக் கட்டுப்பாடு, தூக்கம், ஓய்வு போன்றவைகளில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
    Next Story
    ×