
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
ஆரம்ப நிலையிலேயே தைராய்டு பிரச்சினையை கண்டறிந்து சரியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வந்தால் குணப்படுத்திவிடலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. எலுமிச்சை ஜூஸ் பருகுவதும் தைராய்டு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸை பருகுவது உடலை சமநிலையில் பராமரிக்க உதவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் துணைபுரியும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்கவும் வழிவகை செய்யும்.
தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படுவதற்கு வைட்டமின் சி-யின் பங்களிப்பு இன்றியமையாதது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். லேசாக ஆறியதும் அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து பருகலாம். காலை உணவை சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து பருகுவது நல்லது. அதுபோல் மதிய உணவுக்கு பின்பு பருகலாம்.