என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • 10 வயது இளையவரான பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
    • ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் இணந்துள்ளார்.

    உலக அழகி பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருந்த வந்த பிரியங்கா கடந்த 2018 இல் தன்னை விட 10 வயது இளையவரான பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். இவர்களுக்கு 2022 இல் பெண் குழந்தை பிறந்தது.

    தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினியான கமிட் ஆகி உள்ளார்.

    இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ஒன்று வைரலாகி வருகின்றன. அதில் தனது கழுத்தில் பாம்புடன் பிரியங்கா காட்சி அளிக்கிறார்.

    அருகில் பயந்த பாவனையுடன் நிக் ஜோனாஸ் நிற்கிறார். மேலும் முந்தைய காலங்களில் பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இதனுடன் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

    • ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.

    வரும் வெள்ளிக்கிழமை அன்று அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நவம்பர் 11 அன்று ஐதராதாபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

     2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும்.
    • வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாகவும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட்டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும்.

    அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அதே சமயம் மேற்கு திசை காற்றின் போக்கு காரணமாக, வெப்பம் அதிகரித்து, வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை அதன் சூறாவளி ஆட்டத்தை வருகிற 10-ந் தேதிக்கு பிறகு தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் வங்கக்கடலில் அடுத்தடுத்து நிகழ்வுகள் உருவாகி, பருவமழையை தீவிரப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.

    செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருக்கும் OpenAI, இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

    இந்தியாவின் அதன் மேம்பட்ட பிரீமியம் சந்தா திட்டமான 'ChatGPT Go' ஐ ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

    நவம்பர் 4 முதல் தொடங்கும் சிறப்பு விளம்பர காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ChatGPT Go என்றால் என்ன?

    ChatGPT Go என்பது சமீபத்தில் OpenAI ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டமாகும். இதன் மூலம், ChatGPT இன் அதிநவீன GPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளைப் பெறலாம்.

    இதில் அதிக செய்தி அனுப்பும் வரம்பு, சிறந்த பட உருவாக்கம், அதிக கோப்புகள் மற்றும் படங்களை பதிவேற்றும் வசதி மற்றும் உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த சாந்தா திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 முதல் இது இலவசமாக வழங்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.  

    • எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்
    • அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனகோண்டா பாம்பு என்று விமர்சித்துள்ளார்.

    மும்பையில் புதிதாக பாஜக அலுவகம் அமைக்க சட்டவிரோதமாக நிலம் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் மும்பையின் வோர்லியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய தாக்கரே, "புதிய பாஜக அலுவலகம் அமைக்க மின்னல் வேகத்தில் நிலத்தைக் கைப்பற்றப்பட்டது.

    அனகோண்டா தன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்குவது போல, இவர்கள் மும்பையையும் முழுமையாக விழுங்க நினைக்கிறார்கள்" என்று அமித் ஷாவையும், பாஜகவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் பாஜக தலைவர்களை ஆப்கானியப் படையெடுப்பாளரான அஹமது ஷா அப்தாலியுடன் ஒப்பிட்ட தாக்கரே, "உண்மையான அப்தாலிகள் மீண்டும் வந்துள்ளனர்.

    இந்த முறை அவர்கள் டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்" என்று எச்சரித்தார்.

    அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.  

    • 'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • 1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது.

    உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது.

    'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை.

    இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன.

    'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' அமைப்பு இங்கு உள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்ததாக அவ்வமைப்பின் தெரிவித்தனர்.

    அவை இதன்முன் சாதாரணமாகவே இருந்தன என்றும் அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்துடன் தொடர்ந்து கொண்டதில் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷியா மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது.இதில் பலர் உயிரிழந்தனர்.

    மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தை சுற்றளவுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

    • 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக இந்த படம் அமைந்துள்ளது.
    • ப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

    ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்துள்ளது.

    படம் வெளியான அக்டோபர் 2 முதல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் காந்தாரா சாப்டர் 1 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. படம் வரும் அக்.31ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நவம்பர் 16 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்.
    • சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. கார்த்திகை 1ஆம் தேதி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள்.

    அவர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்சியின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு.
    • புஸ்சி, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்பட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அக்கட்சியின் தவைர் விஜய் புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.

    இதில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம்:-

    1. N. ஆனந்த் பொதுச்செயலாளர்

    2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

    3. Dr. K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்

    4. CTR. நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்

    5. A. ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்

    6. C.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்

    7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்

    8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்

    9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்

    10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்

    11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

    12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்

    13. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்

    14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்

    15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்

    16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

    17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்

    18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்

    19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்

    20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

    21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

    22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்

    23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்

    24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்

    25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்

    26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்

    27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி

    28. டாக்டர். N.மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்

    எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

    • பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சரன் மாவட்டத்தில் உள்ள பர்சா பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சட்டசபைக்கான தேர்தல் வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம்

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    மகளிருக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

    • மண்டாடி படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார்.
    • சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது.

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.
    • 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

    ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.

    மேலும் இப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தாவல் வெளியாகியுள்ளது. இப்படத்தியும் கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ×