என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலங்கானா"

    • காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
    • ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல

    காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.

    இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,

    "தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.

    சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?

    காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?

    தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். 

    • 2 ஓட்டு அவருக்கு போடுங்கள், 2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.
    • ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர்.

    தெலங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் கடந்த வாரம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் வீட்டிற்கு சென்றார்.

    அவரது வீட்டில் பழைய டி.வி. இருப்பதை கண்ட வேட்பாளர் உடனடியாக பெரிய அளவு எல்.இ.டி. டிவி. வரவழைத்து கொடுத்தார். மேலும் அந்த வீட்டில் உள்ள 4 வாக்காளர்களின் கால்களில் முத்தமிட்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என சத்தியம் வாங்கினார் இதனை அறிந்த எதிர்தரப்பு வேட்பாளர் உடனடியாக புதியதாக ப்ரிட்ஜை வாங்கி வந்து கொடுத்து 2 ஓட்டு அவருக்கு போடுங்கள்,  2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.

    தெலங்கானா வாக்காளர்கள் சிலர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் வந்து வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் உள்ளூருக்கு வந்து லாட்ஜில் தங்குவது, உணவு, வாக்களித்துவிட்டு பின்னர் திரும்பி செல்வது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

    பகல் நேரங்களில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை விட இரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளருக்கு தான் அதிக அளவில் உள்ளனர். வாக்காளர் வீட்டிற்கு இரவு நேரங்களில் செல்லும் வேட்பாளர்கள், அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்குகின்றனர். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் வழங்குகின்றனர்.

    இதேபோல் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா, மொயனாபாத், ஷங்கர் பள்ளி, ஷாட் நகர், அமணக்கல்லு, இப்ராஹிம் பட்டிணம், மேட்சல், அடிலாபாத், சிந்தப்பள்ளி, எல்லம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கு கின்றனர். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பணம் வழங்குவதாக உறுதி அளிக்கின்றனர்.  மேலும் பெண் குழந்தை பிறக்கும்போது ஐந்து ஆயிரம், வீட்டில் யாராவது இறந்தால் ஐந்து ஆயிரம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். அதுபோல தெருக்களில் அதிகரித்து வரும் நாய் மற்றும் குரங்கு தொல்லைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். 

    பல தரப்பிலிருந்தும் பணம், பரிசு பொருட்கள் குவிவதால் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து வருகின்றனர். 

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுகூறலாம்.

    ஹைதராபாத்தில் 'பிரணாம்' என்ற முதியோர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்துவைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.

    இந்த பராமரிப்பு மையங்கள் திறப்புவிழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி பெற்றோரை கைவிடும், பெற்றோருக்கு நிதி உதவி செய்ய தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்யும் சட்டத்தை தெலங்கானா அரசு தயாரித்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தவொரு ஊழியரும் தனது பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவரது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்," என தெரிவித்தார். மேலும் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று நாம் கூறலாம். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் பேசியுள்ளார். 

    • பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
    • ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை

    தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, 

    "தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார். 

    தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

    ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை, 

    "காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு. 

    இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது. 

    பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
    • தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    • இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் அசாருதீன் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

    தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் நவம்பர் 11 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    • காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தற்போது 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    ×