search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தங்க மேற்கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
    X

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தங்க மேற்கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு

    • தங்க மேற்கூரை பணியை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு.
    • பக்தர்களுக்கு இனிமையான சூழலை உருவாக்க நடவடிக்கை.

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசுகையில், திருப்பதி சேஷாசல வனப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 'அகேசியா' தாவரத்தைப் பாரம்பரிய தாவரங்களுடன் மாற்றும் திட்டத்தை விரைவுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    ஒரு ஹெக்டேர் நிலத்தில் அகேசியாவை மாற்றும் மாதிரித் திட்டத்தை வனப் பகுதியில் உள்ள பெரிய பகுதிகளுக்கு படிப்படியாக விரிவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தத் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும், பக்தர்களுக்கு இனிமையான சூழலை வழங்கும் வகையில் திருமலை சாலைகளை அழகுபடுத்துதல், தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனம் பணிகளை விரைவுபடுத்துதல், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் மூலவர் விமானத்துக்கு தங்க மேற்கூரை அமைக்கும் பணியை அக்டோபர் மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின் பேரில் திருப்பதியில் உள்ள கோசாலையை ஒரு முன்மாதிரி கோசாலையாக மாற்றுவதற்கான விரிவான செயல் திட்டம் வகுக்கப்படும், என்றார். உள்ளூர் கோவில்களில் நடந்து வரும் கோபூஜை நிகழ்ச்சியை கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மம், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்ம கிஷோர், நிதித்துறை அதிகாரி பாலாஜி, தேவஸ்தான பொறியாளர் நாகேஸ்வரராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×