search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில்"

    • பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும்.
    • கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும். சிரவண சுத்த துவாதசி அன்று துளசி அவதரித்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக 30-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. அதில் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்று துளசி மஹாத்யம் ஓதுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி முத்துக்கவசம் அணிவித்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது.
    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் சாமி எழுந்தருளல், கைங்கர்யங்கள், மகாசாந்தி ஹோமம் நடந்தது.

    கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது. மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை கவச பிரதிஷ்டை நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை கவச சமர்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்கக் கவசங்களை எடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்து தங்க முலாம் பூசி மீண்டும் உற்சவர்களுக்கு அணிவிப்பது ஜேஷ்டாபிஷேகம் ஆகும்.

    அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கவச்சாதி வாசமும், நாளை (சனிக்கிழமை) கவச பிரதிஷ்டை, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கவச சமர்ப்பணம் நடக்கிறது. விழாவையொட்டி 3 நாட்களுக்கு காலை மகாசாந்தி ஹோமம், புண்யாஹவச்சனம், காலை 10 மணிக்கு உற்சவர்களான சாமி, தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் ஷடகலச ஸ்தாபனம், மாலை சாமி வீதி உலா நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் வரும் ஜேஷ்டா நட்சத்திரத்தின் தொடக்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
    • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடந்தது. பிரம்மோற்சவ விழா மற்றும் நித்ய கைங்கர்யங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி நேற்று கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் தலைமையில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி, துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை என 12 வகையிலான 3 டன் பாரம்பரிய மலர்களால் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தினர்.

    புஷ்ப யாகத்துக்கு தேவையான மலர்களை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் வாகனங்களில் காணிக்கையாக கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். புஷ்ப யாகம் முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • நேற்று இரவு கொடியிறக்கம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி 9-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகப் புறப்பட்டு கபிலதீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. கபிலத்தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக கட்டிடம் எதிரே உள்ள பி.ஆர். தோட்டத்துக்கு உற்சவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு பி.ஆர்.தோட்டத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிந்தராஜசாமி கோவிலை அடைந்தனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.40 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    • பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் சன்னதியில் தொடங்கிய தேரோட்டம் கர்னால வீதி, பேரி வீதி, காந்தி வீதி வழியாக கோவிலின் ரத மண்டபத்தை வந்தடைந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

    அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை சூரியபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதி உலா முடிந்ததும் காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை 'வேணுகோபாலசாமி' அலங்காரத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஊஞ்சல்சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 2-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'முரளிகிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா்.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    • திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது.
    • சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, பஜனை, கோலாட்டங்களுடன் கோவில் மாட வீதிகளில் வாகனசேவை நடைபெற்றது. பின்னர் சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இன்று தங்கக் கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அமிர்தம் வேண்டி பார்க்கடலை கடைந்தபோது, அதில் இருந்து தோன்றிய மரம் கற்பக விருட்சம். அந்த மரத்தின் கீழ் அமர்ந்து வரம் வேண்டி தியானம் செய்தால், பக்தர்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க உற்சவர் கோவிந்தராஜசாமி உபயநாச்சியார்களுடன் இணைந்து சிறப்பு அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், கங்கணப்பட்டர் ஏ.பி.சீனிவாச தீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் நாராயணா, கோவில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று அனந்த சுவாமி அலங்காரத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று நரசிம்மம். பாதி மனித உருவம், பாதி சிங்க உருவத்துடன் தூணில் இருந்து வெளிப்பட்டவர். தன்னை சரண் அடைந்தால் தீய சக்திகளிடம் இருந்து காப்பேன் என்று உணர்த்தவே மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கங்கணபட்டர் ஏ.பி. சீனிவாசதீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் மோகன் ராவ், ஆய்வாளர் தனஞ்சயலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி அங்குரார்ப்பணம், யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம் நடந்தன.

    22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நேற்று காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது. அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடந்தது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருமலை பெரிய, சின்னஜீயர் சுவாமிகள், கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாசதீட்சிதர், ஆகம ஆலோசகர் சீதாராமச்சாரியலு, மோகன ரங்காச்சாரியலு, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அசோக்குமார், இணை அதிகாரி வீரபிரம்மன், நிதித்துறை அதிகாரி பாலாஜி, சட்டத்துறை அதிகாரி வீரராஜூ, கோவில் துணை அதிகாரிகள் சாந்தி, கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர்கள் நாராயணா, மோகன்ராவ், கோவில் ஆய்வாளர்கள் தனஞ்செயா, ராதாகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ×