search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumbaishekam"

    • மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி அங்குரார்ப்பணம், யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம் நடந்தன.

    22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நேற்று காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது. அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடந்தது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருமலை பெரிய, சின்னஜீயர் சுவாமிகள், கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாசதீட்சிதர், ஆகம ஆலோசகர் சீதாராமச்சாரியலு, மோகன ரங்காச்சாரியலு, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அசோக்குமார், இணை அதிகாரி வீரபிரம்மன், நிதித்துறை அதிகாரி பாலாஜி, சட்டத்துறை அதிகாரி வீரராஜூ, கோவில் துணை அதிகாரிகள் சாந்தி, கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர்கள் நாராயணா, மோகன்ராவ், கோவில் ஆய்வாளர்கள் தனஞ்செயா, ராதாகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ×