search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மனிதனை மெய்வழிக்கு அழைத்து செல்லும் பரமபத சோபன (பாம்பு கட்ட) விளையாட்டு
    X

    மனிதனை மெய்வழிக்கு அழைத்து செல்லும் பரமபத சோபன (பாம்பு கட்ட) விளையாட்டு

    • நம் வாழ்க்கையில் நல்லதைச் செய்வோம்.
    • பரமனின் பாதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம் பரமபதம்.

    பரமபத சோபனம் என்ற பாம்பு கட்ட விளையாட்டு இந்தியாவில் தொன்மையான ஒன்று. இவ்விளையாட்டை 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கவிஞர் ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். தொன்மையான பரம பதம் துணியில் வரையப்பட்டதாகும். பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கின்றன.

    ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட பரமபதத்தில் 12-ம் கட் டம் உண்மையையும், 51-ம் கட்டம் நம்பிக்கையையும், 57-ம் கட்டம் பெருந்தன்மையையும், 76-ம் கட்டம் ஞானத் தையும், 78-ம் கட்டம் சன்னி யாசத்தையும், குறிக்கின்றன. இந்த கட்டங்களில் மட்டுமே ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், ஜெயம், அதிர்ஷ்டம், முன்னேற்றம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

    41-ம் கட்டம் கீழ்படியாமையையும், 44-ம் கட்டம் அகந்தையையும், 49-ம் கட்டம் ஈனத்தையும், 52-ம் கட்டம் களவையும், 58-ம் கட்டம் பொய் புரட்டையும், 62-ம் கட்டம் மதுபானம் அருந்துதலையும், 69-ம் கட்டம் கடனையும், 73-ம் கட்டம் கொலையையும், 84-ம் கட்டம் கோபம், வெஞ்சினம், வஞ்சத்தையும், 92-ம் கட்டம் கர்வத்தையும், 95-ம் கட்டம் பெருமையையும், 99-ம் கட்டம் காமத்தையும், கொடுக்கும். இந்த கட்டங்களில் உள்ள பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம் மற்றும் அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்றவற்றை கொடுப்பவை.

    2 முதல் 4 பேர் வரை விளையாடக்கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டையை உருட்டி அதில் வரும் எண்ணுக்கு தகுந்தவாறு கட்டங்களில் காய்களை நகர்த்தி செல்ல வேண்டும். விளையாட்டை தொடங்க தாயம் 1 விழ வேண்டும். இப்போட்டியில் முதலில் மோட்சம் பெற்றவர் வெற்றி பெற்றவர் ஆவார். 100-ம் கட்டம் நிர்வாணம் (மோட்சம் மற்றும் முக்திக்கு இணையானது) என்று அழைக்கப்பட்டது.

    பரதபதத்தில் நாம் தாயக்கட்டையை உருட்டுகிறோம். உருட்டிக் கொண்டு போனவுடன் முதலில் சிறுபாம்பு கடித்து மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும். இதில் இருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்து மேலே இருந்து கீழே வந்து விடுகிறோம். இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் திரும்ப வந்து பல சுழற்சிக்கு பிறகு மேலே போகிறோம்.

    இன்னும் இரண்டே கட்டம் தான் என்று எண்ணி விளையாடும் போது எல்லாவற்றையும் விட பெரிய பாம்பு அங்கே இருக்கும். பயத்தில் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் விஷ நிலைகள் கீழே இறக்கி பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும். கீழ் நிலைக்கு கொண்டு வந்து மிக மோசமான சரீரத்தை (பிறப்பை) எடுக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது-.

    வாழ்க்கை என்ற அற்புதத் தின் சுழற்சியில் நடக்கும் உயர்வு, தாழ்வு என்ற பிறப் பின் பெரு ரகசியத்தை பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள்தான் ஏகாதசி. பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு, வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் ஆகி, அந்த மெய் ஒளி யின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களில் தனிக்கதவை திறந்து வைப்பார்கள்.

    இன்றைக்கும் பலரும் ஏதோ பெயரளவுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமியை கும்பிட்டோம் என்று இருக்கிறோம். பரபதம் என்ற வாழ்க்கையின் சூத்திரத்தை ரகசியத்தை அறியாமல் கதையை கேட்டு சொர்க்கம் கிடைக்கும், மோட்சம்அடை யலாம் என்று எண்ணி இருக் கிறோம். ராத்திரியெல்லாம் விழித்திருந்தோம். இரவு பரம பதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் பரமபதம் என்றால் என்ன என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    பரமபதத்தின் ரகசியம் என்ன?

    பரமபதத்தை அடைய வேண்டும் என்றால்விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாத படி ஒளியின் சரீரமாக நாம் ஆகி, அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது மனதின் குணங்கள் 13 ஆகும். அவை ராகம், துவே ஷம், காமம், குரோதம், உலோகம், மோகம், மதம், மாச் சர்யம் (பொறாமை) ஈரிஷை, அசூயை, டம்பம், தர்பம், அகங்காரம், குணங்களை மாற்ற கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சகுணம், ஸ்தோத்திரம், தியானம், யாகம், மவுனம், பக்தி, சித்தி, சிரத்தை, ஞானம், வைராக்கியம்.

    13 குணங்களை செம்மைப்படுத்தி நாம் பரவாசுதேவனின் பரமபதத்தை அடையும் வழிகளை உதாரணங்களுடன் விளக்குவதே பாம்பு, ஏணி என நாம் விளையாடும் பரமபத சோபன விளையாட்டு. பரமனின் பாதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம் பரமபதம்.

    நம் வாழ்க்கையில் நல்லதைச் செய்வோம். அதே சமயம், நம்மை அறியாமல் வேதனை போன்ற நிலை ஏற்படும் போது விஷம் போன்ற பாம்பு நிலைகளால் கொத்தப்பட்டு நோய் வாய்ப்பட்டு மனித சரீரத்தை இழந்து இழிநிலையான சரீரத்தை பெற்று அதிலிருந்து மீண்டு மனிதனாகி, மீண்டும் இழந்து மீண்டும் வளர்ந்து என இந்த சுற்றிலேயே இருக்கிறோமே தவிர மெய் வழியை அடையும் தன்மை இல்லாமல் இருக்கிறோம்.

    அத்தகைய மெய் வழிக்கு செல்வதற்கு என்ன வழி என்பதைத்தான்அன்று மெய்ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். பரமபதம் வாழ்க்கையின் ரகசியத்தை சூட்சுமத்தை மனிதனுக்கு உணர்த்தும் பேருண்மையின் பாதை.

    பரமபதம் அடைவது என்றால் பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களில் இருந்து அடுக்கடுக்காகச் சென்று மனிதன் என்ற நிலை பெற்று அதில் இருந்து உயிரை ஒளியாக மாற்றி, உடலை விட்டு உச்சிக்கு சென்று விண்ணில் பேரொளியாக நின்று நிலைபெற கூடிய நிலையை பரமனின் பதம் எனக் காட்டி அதற்கு உகந்த நாளாகத்தான் ஏகாதசியை நமக்கு ஞானிகள் காட்டியுள்ளனர்.

    Next Story
    ×