என் மலர்

  வழிபாடு

  பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தெப்பத்திருவிழா
  X

  பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தெப்பத்திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீவட்டி வெளிச்சத்தில் ஜொலித்த சாமிகளை பக்தர்கள் வணங்கி ரசித்தனர்.
  • சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளான சுந்தரேஸ்வரர், சிவகாமி அம்மன், ஆனந்தவல்லி ஆகியோர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அமர்ந்து தீவட்டி வெளிச்சத்தில் கோவில் தெப்பக்குளத்தில் நடுவில் உள்ள கல்மண்டபத்தை மூன்று முறை வலம் வந்தனர்.

  மின்னொளியிலும், தீவட்டி வெளிச்சத்திலும் ஜொலித்த சாமிகளை குளத்தின் கரையில் நின்ற பக்தர்கள் வணங்கி ரசித்தனர். கோவில் குளத்தில் வலம் வந்த சாமிகள் பின் கோவிலுக்குள் சென்று கோவில் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தபின் விழா நிறைவடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×