search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: கஞ்சி வார்த்தல்-பால் அபிஷேகத்தை தொடங்கி வைத்த பங்காரு அடிகளார்
    X

    மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: கஞ்சி வார்த்தல்-பால் அபிஷேகத்தை தொடங்கி வைத்த பங்காரு அடிகளார்

    • தாய் வீட்டு கஞ்சி பங்காரு அடிகளார் முன்னிலையில் கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது.
    • பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து அபிஷேகம் செய்தனர்.

    சென்னை

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன் னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மீக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

    நேற்று காலை 6 மணிக்கு கஞ்சி தயாரிக்கப்படும் கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து மண் கலயங்களில் புதிய கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மீக இயக்க துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    காலை 8.30 மணிக்கு ஆன்மீக குரு பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் தாய் வீட்டு கஞ்சி எடுத்துவரப்பட்டு பங்காரு அடிகளார் முன்னிலையில் கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது.

    மதியம் பங்காரு அடிகளார் பால் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற ரெயில்வே உயர் அதிகாரி ஜெயந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பால் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து வந்து அபிஷேகம் செய்தனர். நேற்று மதியம் தொடங்கிய பால் அபிஷேகம் இரவு முழுவதும் விடிய விடிய நடந்தது. இன்று மதியம் வரை பால் அபிஷேகம் நடைபெற்றது.

    வரிசையில் வரும் பக்தர்களுக்கு உணவு பொருட்களும், தேநீர், இட்லி, பழ பானங்களும், குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் முதலியவைகளும் செவ்வாடை தொண்டர்கள் வழங்கினர்.

    Next Story
    ×