search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவசக்தி பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் அக்னிசட்டி ஊர்வலம்
    X

    சிவசக்தி பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் அக்னிசட்டி ஊர்வலம்

    • மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடிக் கொடை விழா மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது. முதல் நாள் மாலை 4.30 மணிக்கு வெண்கல அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு நையாண்டி மேளமும் கரகாட்டமும் நடைபெற்றது. 2-ம்நாள் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், வேள்வி பூஜைகளும், அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடந்தது. மதியம் 12 மணிக்கு மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு பூரண கும்பம் ஏற்றி, முளைப்பாரி ஊர்வலம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலம் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை திறளை பூஜைகள் மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூசாரி சங்கரன் அக்னி சட்டி எடுத்தும், கையில் தீப்பந்தங்களுடனும், கையில் இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டும் பூக்குழி இறங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×