search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மஞ்சியம்மன் கோவிலில் ஆடி திருக்கல்யாணம்
    X

    மஞ்சியம்மன் கோவிலில் ஆடி திருக்கல்யாணம்

    • பக்தர்கள் சீர்வரிசை, பட்டுப்புடவை என 21 தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.
    • அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.

    சேத்துப்பட்டு தர்மராஜா கோவில் தெருவில் உள்ள மஞ்சியம்மன் கோவிலில் ஆடி மாத திருக்கல்யாண விழா நடந்தது. இதனையொட்டி மஞ்சியம்மன், மஞ்சுநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. விரதம் இருந்த பெண்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து மஞ்சியம்மனுக்கும், வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியருக்கும் அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் அருள்வாக்கு கேட்டனர். இதைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு ஆடு வெட்டி பொங்கல் வைத்து கும்ப படையல் போட்டனர். மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலும் துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை செய்யப்பட்டது. இதில் குழந்தை வரம் வேண்டியும், திருமண தடைநீங்கவும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டியும் வழிபாடு செய்தனர்.

    இரவு 7 மணி அளவில் கோவில் அருகே வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியரை புஷ்பப் பல்லக்கில் எழுந்தருள செய்து மஞ்சுநாதர்-மஞ்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் சீர்வரிசை, பட்டுப்புடவை, பட்டு வேட்டி, தங்கத் தாலி, தேங்காய், பூ மாலை, குங்குமம், மஞ்சள், தாலி சரடு இனிப்பு வகைகள் என 21 தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் வள்ளி, தெய்வானை, சிவசுப்பிரமணியர், மஞ்சியம்மன், மஞ்சுநாதரை புஷ்ப பல்லக்கில் எழுந்தருள செய்து வீதி உலா நடத்தினர்.அப்போது தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினருடன் இணைந்து விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×