
2-வது நாளான நேற்று முக்குலத்தோர் மண்டகப்படி சார்பில் அம்மன் பூச்சப்பர பவனி முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டியன், செயலாளர் காசிபாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் மண்டகப்படி தலைவர் ரமேஷ்பாண்டியன் மற்றும் விழா நிர்வாக குழு, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், சேகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.