
திருவிழாவின்போது பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து விநோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பாடைக்காவடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாடை மீது படுத்து கோவிலை வலம் வந்து ‘பாடைக்காவடி’ நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பாடைக்கட்டி மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.