search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சஞ்சீவி ஆஞ்சநேயர்
    X
    சஞ்சீவி ஆஞ்சநேயர்

    சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி-வடைமாலை நாளை சாற்றப்படுகிறது

    நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரிகளாலான மாலை சாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
    திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் மஹா சுதர்சன ஹோமம் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரிகளாலான மாலை சாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 3-வது நாளாக வருகிற 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது.

    பின்னர் காலை 7 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் வைபவம் நடக்கிறது. வருகிற திங்கட்கிழமை மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
    Next Story
    ×