என் மலர்

  வழிபாடு

  பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
  X
  பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

  பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி முருகன் கோவிலில் மார்கழி மாதம் என்பதாலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதாலும் கூட்டம் அலைமோதுகிறது.
  அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சமீபகாலமாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி மாதம் என்பதாலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதாலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே வார விடுமுறை, தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று பழனியில் பக்தர்கள் குவிந்தனர்.

  அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டம் அதிகம் இருந்ததால், ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். குறிப்பாக தரிசன வழிகளை தாண்டியும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  கூட்டம் அதிகமாக இருந்ததால், சுமார் 3 மணி காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×