என் மலர்

  வழிபாடு

  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
  X
  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

  ஆனங்கூரில் பகவதி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் உள்ள பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அன்றைய இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 19-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

  இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றிக்கு சென்று புனித நீராடி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

  இதையடுத்து ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக ‌உலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல்‌ நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆனங்கூர் பகவதியம்மன் கோவில் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×