என் மலர்

  வழிபாடு

  பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு
  X
  பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு

  பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவிசநல்லூர் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் கிராமத்தில் சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 அடி உயர 5 முகத்துடன் கூடிய பிரித்தியங்கிரா தேவி அருள்பாலிக்கிறார்.

  பஞ்சமுக பிரத்யங்கிரா தேவிக்கு செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் சிறப்பு வழிபாடுகள், சாகம்பரி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். மார்கழி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று அம்மன் சாகம்பரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

  விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கணேஷ்குமார்குருக்கள், வழிபாட்டு குழு தலைவி நந்தினிகணேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
  Next Story
  ×