என் மலர்

  நீங்கள் தேடியது "Pratyangira Devi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது.
  • காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது.

  கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில், ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. அங்கு ஆடி அமாவாசையையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு பிரத்தியங்கரா தேவி யாகம் நடந்தது. இதனை, மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார்.

  யாக குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு, அதில் நெய் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, விருதுநகர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகிற 50-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகா பிரத்யங்கிரா தேவி, காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது.
  • இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பில் மகாபிரத்தியங்கிராதேவி-மகா காலபைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்யங்கிரா தேவி, காலபைரவர் ஹோமம் நடத்தப்பட்டது.

  தொடர்ந்து பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித் தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கிடைத்திடவும், உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி 10 ஆயிரத்து 8 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம் நடத்தப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யாககுண்டத்தில் குவியல், குவியலாக பச்சை மிளகாயை போட்டு வழிபட்டனர். பின்னர் மகா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனையும் நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக. கொட்டப்பட்டு பூஜை நடைபெற்றது.
  • மடத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் நடைபெற்றது.

  கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு ஆனிமாத அமாவாசையையொட்டி மகா பிரத்தியங்கராதேவி பூஜை நடந்தது. இதனை மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினர்.

  பூஜையில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக. கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

  முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு 1008 லட்டு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசை நாட்களில் நிகும்பலா யாகம், மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம். நேற்று (வியாழக்கிழமை) தீபாவளியை முன்னிட்டு 1008 லட்டு யாகம் நடந்தது.

  யாகத்தில் பல்வேறு விதமான இனிப்பு பலகாரங்கள் போடப்பட்டது. பூஜைகளை கணேஷ்குமார் குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவிசநல்லூர் பிரித்தியங்கராதேவி கோவிலில் ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
  கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் பிரித்திங்கராதேவி கோவில் உள்ளது. இங்கு 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகா மங்கள பிரித்தியங்கராதேவி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

  இக்கோவிலில் அமாவாசை நாட்களில் நிகும்பலா மகா யாகம் நடைபெறுவது வழக்கம். பிரித்தியங்கராதேவிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் சாகம்பரி அலங்காரம் நடைபெறும்.

  அதன்படி ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.
  ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;
  ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
  சூல ஸ்தூல கபால பாச டமரு
  வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
  தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம்
  ஆரக்த நேத்ரத்ரயீம்
  பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
  ப்ரத்யங்கிராம் பாவயே

  அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி, அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
  ×