என் மலர்

  வழிபாடு

  துறையூர் பெருமாள் கோவிலில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு
  X
  துறையூர் பெருமாள் கோவிலில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு

  துறையூர் பெருமாள் கோவிலில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துறையூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஹனுமான் சன்னதி ,அம்பாள் சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
  துறையூரில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி என்ற பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல வருடங்கள் ஆகிறது. தற்போது கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், சிதிலம் அடைந்தும் காணப்படுகிறது. மேலும் இக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

  இக்கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி கோவில் முன்பகுதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஹனுமான் சன்னதி ,அம்பாள் சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

  முன்னதாக காலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறாமல் இருந்ததால் ஹோமங்கள் நடத்தப்பட்டது. வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமபுற மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ராஜ கோபுரத்தில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால் அறநிலைய துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
  Next Story
  ×