என் மலர்

  வழிபாடு

  16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை
  X
  16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை

  புதுவை பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
  புதுவை-திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டியில் 72 அடி உயர பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர், பிரளைய விநாயகர் உள்பட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் தற்போது 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக ஒரே கல்லில் 16 டன் எடை உள்ள இந்த சிலை கடந்த மாதம் 11-ந் தேதி ஆந்திரமாநிலம் அஹோபில மடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த 17ந் தேதி மொரட்டாண்டியை வந்தடைந்தது.

  இச்சிலை நாளை மறுநாள் (புதன்கிழமை) கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. முன்னதாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு யாக பூஜைகள் தொடங்குகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×