search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்கூடலில் தசரா பூஜை
    X
    முக்கூடலில் தசரா பூஜை

    முக்கூடலில் தசரா பூஜை

    தசரா பூஜையை முன்னிட்டு முத்துமாலை அம்பாளுக்கு அலங்காரம் செய்து, கொலு பொம்மைகள் அமைத்து தினமும் இரவு பூஜை நடைபெறும்.
    முக்கூடல் அமர்நாத் வளாகத்தில் ஆண்டுதோறும் தசரா பூஜை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பூஜை கடந்த 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. தசரா பூஜையை முன்னிட்டு முத்துமாலை அம்பாளுக்கு அலங்காரம் செய்து, கொலு பொம்மைகள் அமைத்து தினமும் இரவு பூஜை நடைபெறும். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    முக்கூடல் இந்து நாடார் சமுதாய தலைவர் வேல்சாமி நாடார், துணைத் தலைவர் மாரியப்பன் நாடார், செயலாளர் சந்திரன் நாடார், பொருளாளர் முத்தரசு ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியின் 10-வது நாள் சூரசம்ஹாரமும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்பாள் சப்பர பவனியும் நடைபெறுகிறது. 11-வது நாள் அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
    Next Story
    ×