search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்காததால் விழா எளிமையாக நடந்தது.
    தமிழகத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை தடுக்கும் வகையில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் நேற்று முதல் வருகிற 9-ந்தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கோவிலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். சில பக்தர்கள் கோவிலின் முன்பு நின்று வழிபட்டு சென்றனர். இதனால் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

    விழாவின் 4-ம் நாளான வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் உள்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் நிறைவு நாளான வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு முளைக்கொட்டு திருவிழா நடைபெறும்.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×