search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பசுபதீஸ்வரர்
    X
    பசுபதீஸ்வரர்

    கதிர்நரசிங்கபெருமாள் கோவில்பட்டியில் பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 22-ந்தேதி நடக்கிறது

    சாணார்பட்டி ஒன்றியம் வத்தலதோப்புபட்டி அருகேயுள்ள கதிர்நரசிங்கபெருமாள் கோவில்பட்டியில் பசுபதீஸ்வரர் உடனுறை அலங்காரவள்ளி, காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில்களின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    சாணார்பட்டி ஒன்றியம் வத்தலதோப்புபட்டி அருகேயுள்ள கதிர்நரசிங்கபெருமாள் கோவில்பட்டியில் பசுபதீஸ்வரர் உடனுறை அலங்காரவள்ளி, காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 20-ந்தேதி கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

    இதையடுத்து 21-ந்தேதி 2-ம்கால யாகபூஜைகள், கும்ப அலங்காரம், 3-ம்கால யாகபூஜைகள், தீபாராதனை, அ‌‌ஷ்டபந்தனம் சாத்துதல் ஆகியவை நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து 22-ந்தேதி பல்வேறு பூஜைகளுடன் கடம் புறப்பாடு தொடங்கி காலை 6 மணிக்கு பசுபதீஸ்வரருக்கும், அதன்பின்னர் காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கும், கோவில் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×