
இதனையொட்டி சிறப்பு யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்கிட புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மகாஅபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் காட்டப்பட்டது.
இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், கோவில் நிர்வாகி அனந்தராமர், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.