
இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி திருவாடானை ஆதிரெத்னேஸ்வரர் ஆலய குருக்கள் சந்திர சேகர சிவாச்சாரியார் தலைமையில் கோவிலின் முன்பு சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக வேள்விகளை நடத்தினர். அதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக சாய்பாபா வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது.