search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X
    அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    அரியாங்குப்பத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் திரவுபதி அம்மன், பார்த்தசாரதி பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    அரியாங்குப்பத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த 1-ந் தேதி விசேஷ பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

    நேற்று காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து 10.30 மணியளவில் திரவுபதி அம்மன், பார்த்தசாரதி பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அர்ச்சுனன், திரவுபதி அம்மன் மற்றும் ருக்மணி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் பாஸ்கர், மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி பொறுப்பாளர் ருத்திரக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×