
பின்னர் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.