search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன்
    X
    சமயபுரம் மாரியம்மன்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரம் கோவிலில் குவிந்தனர். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஏராளமான அளவில் வந்தனர்.
    சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து அம்மனை வணங்கிச் செல்வார்கள்.

    இந்தநிலையில் அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரம் கோவிலில் குவிந்தனர். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஏராளமான அளவில் வந்தனர்.

    அவர்கள் கோவில் முன்புறமும், நெய்விளக்கு ஏற்றும் இடத்திலும் தீபமேற்றி வழிபட்டனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மாவிளக்கு போட்டும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்று அம்மனை வணங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வணங்கி சென்றனர்.

    பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் சமூக விரோதிகள் யாரேனும் ஈடுபடுகிறார்களா என்று சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் சிலரிடம், அப்பகுதியை சேர்ந்த சிலர் அம்மனை அருகிலிருந்து தரிசிக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி பணம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில்,போலீசார் குறிப்பிட்ட நபர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
    Next Story
    ×