search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன்
    X
    மீனாட்சி அம்மன்

    மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க ரத உலா நடைபெறாது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கார்த்திகை உற்சவ விழாவில் தங்க ரத உலா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கார்த்திகை உற்சவ விழாவில் தங்க ரத உலா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவிலின் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (நேற்று) தொடங்கிய திருக்கார்த்திகை உற்சவ விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உற்சவம் 10 நாட்களும் நடைபெறும்.

    மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் ஆடி வீதி வழியாக புறப்பாடாகிறார்கள். 29-ந் தேதி திருக்கார்த்திகையன்று மாலை கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

    அன்றைய தினம் இரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, அம்மன் சன்னதி திருவாச்சி மண்டபம் சென்று சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுகிறார்.

    மேற்படி 2 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். மேலும் உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×