search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்தவில்லை என்றால் 3 கட்ட போராட்டம் நடத்த பக்தர்கள் சங்க ஆலோசனை கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டத்தில் உள்ள சேவாபாரதி அரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் எஸ்.பி. அசோகன், செயலாளர் முருகன், பொருளாளர் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி நகர பா.ஜனதா கட்சி நிர்வாகி சுபாஷ் வரவேற்று பேசினார். கூடத்தில் இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் திரவியம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெகன், கொட்டாரம் ராமர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன், பூவியூர் இந்து முன்னணி நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி மகாதானபுரத்தில் வைத்து நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறையை கேட்டு கொள்வது, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அரசின் கொரோனா வழிகட்டுதல் நெறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, பரிவேட்டை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி மகாதானபுரத்தில் நடத்த அனுமதிக்காவிட்டால் 24-ந் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதன் பிறகும் அனுமதி அளிக்காவிட்டால் விஜயதசமியான 26-ந்தேதி அன்று கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் முன் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகும் அனுமதி அளிக்காவிட்டால் அன்று மாலை 3-வது கட்ட போராட்டமாக கன்னியாகுமரி முதல் பரிவேட்டை நடைபெறும் மகாதானபுரம் வேட்டை மண்டபம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரளாக கூடி நின்று கையில் தீபம் ஏற்றும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    முடிவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×