search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில்
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்கி, வருகிற 25-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்கி, வருகிற 25-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    மகிஷாசுரனை அழிக்க அம்மன் கடும் தவம் புரிந்து மரக் கேடயத்தில் அம்மன் புறப்பாடும், 10-வது நாளான 26-ந்தேதி விஜயதசமி அன்று சமயபுரம் கடைவீதி வன்னி மரத்திற்கு வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நவராத்திரி திருவிழாவில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், சமயபுரம் தடை செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அம்மன் புறப்பாடு நடைபெறாது.

    நாளை மறுதினம் முதல் 25-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×