
இதையொட்டி இன்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி) ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
அதன்படி பிரம்மோற்சவத்தை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது.
மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாயகர் மண்டபம், மகாதுவாரம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகள் நடந்தது.
பின்னர் பச்சை கற்பூரம் திருச்சூனம், மஞ்சள் கிச்சலிகட்டை உள்ளிட்ட மூலிகை பொருட்களால் ஆன கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக குறைந்த அளவு ஊழியர்களே ஆழ்வார் திருமஞ்சனத்தில் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரங்கநாயகர் மண்டபத்தில் கொலு வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.