search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
    X
    ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

    ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

    கொரோனா ஊரடங்கினால் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் மூடப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்டம், நிகழ்ச்சி வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவிலில் நடந்தது.
    கொரோனா ஊரடங்கினால் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் மூடப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்டம், நிகழ்ச்சி வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு கலச ஆவாகணம் செய்யப்பட்டு, உலக சுபிட்சத்திற்காக ரிஷிகளின் அருளை பெறவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.

    காண்டரிஷி சிறப்பு ஹோமம் மற்றும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை லால்குடி மாந்துறை ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி உள்பட திரளான பிராமணர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் அர்ச்சகர் செல்லப்பா சிவாச்சாரியார் கணபதி ஹோமத்தை நடத்தி வைத்தார். இதனை ஒட்டி சவுபாக்கிய விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டன.

    இதேபோல் அரியலூரில் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து புதிய பூணூலை அணிந்து காயத்ரி மந்திரங்களை ஜெபித்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
    Next Story
    ×