search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காசிப முனிவர்
    X
    காசிப முனிவர்

    காசிப முனிவரின் பிள்ளைகள்

    காசிப முனிவரின் மனைவியர்களில், கத்ரு மற்றும் விநதை ஆகியோரும் அடங்குவர். இங்கே கத்ருவுக்கு நூற்று நாலு புத்திரர்கள், ஒரு புத்திரி. அவர்கள் நூற்று ஐந்து பேரின் பெயர்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
    காசிப முனிவரின் மனைவியர்களில், கத்ரு மற்றும் விநதை ஆகியோரும் அடங்குவர். இவர்களில் கத்ரு தனக்கு வலிமை வாய்ந்த பிள்ளைகள் வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து அவளுக்கு நூற்று ஐந்து முட்டைகள் கிடைத்தது. அதே போல் விநதையும், தனக்கு சக்தியும், அறிவும் மிக்க இரண்டு புத்திரர்கள் வேண்டும் என்று கேட்டாள். அவளுக்கு காசிப முனிவரின் மூலமாக இரண்டு முட்டைகள் கிடைத்தன. விநதையிடம் இருந்த முட்டைகளில் இருந்து பறவை இனத்தைச் சேர்ந்த அருணனும், கருடனும் வெளிவந்தனர். இதில் அருணன், சூரியனுக்கு தேரோட்டியாக இருக்கிறார். கருடன், திருமாலுக்கு வாகனமாக விளங்குகிறார். இவர்கள் இருவரையும் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

    ஆனால் கத்ருவின் பிள்ளைகளின் பெயர்கள் பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இங்கே கத்ருவுக்கு நூற்று நாலு புத்திரர்கள், ஒரு புத்திரி. அவர்கள் நூற்று ஐந்து பேரின் பெயர்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

    1.ஆதிசேஷன், 2.வாசுகி, 3.தட்சகன், 4.கார்கோடகன், 5.தனஞ்செயன், 6.காளியன், 7.நாகபுராணன், 8.புஞ்சன், 9.புரஞ்சகன், 10.ஏலாபுத்திரன், 11.வாமனன், 12.நிலன், 13.அநிலன், 14.கல்மாஷன், 15.சபலன், 16.ஆரியகன், 17.புண்டிரகன், 18.விசாலன், 19.போதகன், 20.சுமநோகன், 21.ரதிமுகன், 22.ததிமுகன், 23.விமலன், 24.குண்டலன், 25.பிண்டகன், 26.பந்தகன், 27.ஆப்தன், 28.கோடரகன், 29.சங்கபாதன், 30.சிகன், 31.நிஷ்டூரகன், 32.ஏமன், 33.உக்கமுகரன், 34.நகுஷன், 35.பிங்கலன், 36.கோகர்னன், 37.அவ்வியகர்னன், 38.அவிர்முகன், 39.முதகரன், 40.கம்பளாசுவன், 41.அஸ்வநரன், 42.தானியகன், 43.உருத்தன், 44.சுவருத்தன், 45.சம்வாதகன், 46.சங்கநகன், 47.பிண்ட ரகன், 48.அஜரன், 49.சேட்சமகரன், 50.சமுகன், 51.பிண்டநகன், 52.ரசேட்சமுகன், 53.பிடரகன், 54.கரவீரன், 55.புட்பதவுஷ்டரன், 56.நகரன், 57.பலகரன், 58.சாலகன் பகன், 59.வில்வபாண்டூரன், 60.பாதகபராசிதன், 61.பதங்கக்கிரீவன், 62.ரத்தாட்சன், 63.அபராதிகன், 64. மூஷீகாதன், 65.சங்கசரன், 66.புண்ணிய தமுஷ்டரன், 67.அரித்திரன், 68.அபானமித்திரன், 69.ஜோதிகன், 70.ஸ்ரீவகன், 71.பராதீதன், 72.அவக்கிரீவன், 73.கவர்வியன், 74.இரிதராஷ்டிரன், 75.புஷ்கரன், 76.சல்லியன், 77.வீரஜன், 78.சாலுண்டன், 79.கபோதவன், 80.வில்வகன், 81.சுபகு, 82.சலபிண்டன், 83.அஸ்திபத்திரன், 84.முகரகோணன், 85.நாசிகன், 86.குஞ்சரன், 87.குரங்கன், 88.பிரஹாரன், 89.தித்திரி, 90.புரிலன், 91.பாலகண்டன், 92.குண்டான், 93.குதரன், 94.பிரபகரசு, 95.முதகாண்டன், 96.வீரன், 97.குடாரன், 98.அகுருஷன், 99. காகோதரன், 100.அரிதி. 101.கர்க்கரசன், 102.அகர்க்கரன், 103.குண்டோதரன், 104.மகோதரன், 105.ஜரத்காரை.
    Next Story
    ×