search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருவாயூர் கோவில்
    X
    குருவாயூர் கோவில்

    குருவாயூர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடைபெறும் விஷுக்கனி உற்சவம்

    கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி விஷுக்கனி தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் ‘விஷு’ திருநாளன்று அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனி கண்டு, இந்த புத்தாண்டு அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனை பக்தியுடன் வழிபட்டு, குடும்பத்தினருடன் அறுசுவை விருந்துண்டு ‘விஷு’ தினத்தை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். இதையொட்டி அங்குள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் விஷு உற்சவ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விஷுக்கனி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி விஷுக்கனி தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் நடக்கும் விஷுக்கனி சடங்குகளில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×